2635 டன் கோதுமை பஞ்சாப்பில் இருந்து சேலம் வந்தது..!

கொரோனா காலத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 2635 டன் கோதுமை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சேலம் ஜங்ஷன் கூட்ஷெட் வந்தது.;

Update: 2021-05-19 06:45 GMT
2635 டன் கோதுமை பஞ்சாப்பில் இருந்து சேலம் வந்தது..!
  • whatsapp icon

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது கட்ட பரவல் தீவிரமடைந்து உள்ளது இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தற்போது தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனைத் தடுக்க தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கும் போது அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் கோதுமை இலவசமாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மத்திய அரசு தொகுப்பு மூலம் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2635 டன் கோதுமை சேலம் ஜங்ஷன் கூட்செட் வந்தடைந்தது.

சேலம் ரயில் நிலையத்திலிருந்து கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சேலத்தில் உள்ள இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கிற்கு இங்கிருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து கோதுமை மூட்டைகள் எடுத்துச்செல்லப்பட்டு சேலம், நாமக்கல் ,தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த பணியின்போது இந்திய உணவுக் கழக சேலம் மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி ஜெயபிரகாஷ் ஆகிய உடன் இருந்தார்கள்.

Tags:    

Similar News