சட்டமன்ற தேர்தலையொட்டி சேலத்தில் 68 ரவுடிகள் கைது.

Update: 2021-03-03 04:45 GMT

சட்டமன்ற தேர்தலையொட்டி சேலத்தில் 68 ரவுடிகள் கைது.


 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், சட்டம் - ஒழுங்கு சீர்கெடாமல் இருக்கவும் ரவுடிகளை கைது செய்து, உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன்பேரில் சேலம் மாநகர பகுதியில் கமிஷனர் சந்தோஷ் குமார் உத்தரவின் பேரில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 68 ரவுடிகளை கடந்த 2 நாளில் போலீசார் கைது செய்தனர். அவர்களை மாநகர துணை கமிஷனர் சந்திரசேகரன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். ஒரு வருட காலத்திற்கு எவ்வித குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டோம் என ரவுடிகள் அனைவரும் பிணை ஆவணம் எழுதிக் கொடுத்தனர். அப்போது குற்றங்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News