சேலத்தில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் இரும்பு கம்பியை திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். வீடு கட்டுமான கான்டிராக்டர். கட்டுமான பொருட்களை தளவாய்ப்பட்டியில் உள்ள குடோனில் வைத்துள்ளார். இந்நிலையில் குடோனில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி இல்லாததை கண்டு ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆனந்த் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் சூரமங்கலம் புதுரோட்டை சேர்ந்த தமிழ்செல்வன், அருணாச்சலம், விக்னேஷ், சுப்பிரமணி, மோகன்ராம் ஆகியோர் இரும்பு கம்பியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இரும்பு கம்பிகளை திருடி ரூ.35 ஆயிரத்துக்கு விற்று, 5 பேரும் பங்கிட்டு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.