தாலிக்கு தங்கம் திட்டம்- முதல்வர் துவக்கி வைப்பு

Update: 2021-02-16 09:00 GMT

சேலம் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சமூகநலத்துறை சார்பாக 7100 மகளிர்களுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஒரு பவுன் தங்கம் வழங்கப்பட உள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்குவதற்காக 56 கோடியே 48 லட்சத்து 21 ஆயிரத்து 538 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பத்தாம் வகுப்பு முடித்த 2363 மகளிர்களுக்கும், பட்டப்படிப்பு முடித்த 4 ஆயிரத்து 737 மகளிர்களுக்கும் என 7100 மகளிர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள தமிழக முதல்வர் இல்லத்தில் 59 மகளிர்களுக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் உதவித்தொகையை வழங்கி துவக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வைத்தார்.இதே நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆன்லைன் விற்பனைக்காக சேலம் மதி என்ற செல்போன் செயலியையும் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் இந்த செயலி மூலமாக 2 ஆயிரம் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. நிகழ்ச்சி யில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், வருவாய்த்துறை, சமூக நலத்துறை அலுவலர்கள் என பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News