குடிநீர் வழங்க வேண்டி காலி குடங்களுடன் தர்ணா
குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து சேலத்தி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சத்யா சத்யா நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடந்த 20 நாட்களாக இந்த பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படாததால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறினர். இதுகுறித்து அதிமுக பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டதற்கு அவர் அநாகரிகமாக பேசியதால் நாங்கள் தர்ணாவில் ஈடுபட்ட தாகக் கூறினார்கள்.