சேலத்தில் குடியரசு தின விழா

72 வது குடியரசு தின விழாவையொட்டி சேலத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-01-26 07:15 GMT

72 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேசியக் கொடி ஏற்றினர். மத்திய மாநில அரசு அலுவலகங்களிலும் குடியரசு தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதன் படி சேலத்தில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 139 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், 121 நபர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கமும் வழங்கினார்.

இதேபோல குடியரசு தினவிழாவை முன்னிட்டு சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இரயில்வே கோட்ட அலுவலகம், சேகோசர்வ் அலுவலகத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Tags:    

Similar News