சேலம் மாவட்டத்தில் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469பேர் 4 ஆயிரத்து 780 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கின்றனர் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்.
சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 246 பேரும் பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 15 ஆயிரத்து 19 பேரும் இதர வாக்காளர்கள் 204 உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்த வாக்கு சாவடிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 280 பதட்டமான வாக்குச்சாவடிகள், 238 தேர்தல் நுண் பார்வையாளர்கள், 289 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட மையங்கள் 2145, மண்டல அலுவலர்கள் 360, வாக்குச்சாவடி அலுவலர்கள் 4708, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 18 ஆயிரத்து 832பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை 6. வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் 5 ஆயிரத்து 142. வாக்குப்பதிவு எந்திரங்கள் 7961. வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் 5740 மொத்தம் 4 வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஆகும்.