தூய்மைப் பணியாளர்கள் நிலுவை ஊதியம் உடனடியாக வழங்கப்படும்: சேலம் மாநகராட்சி ஆணையாளர்

சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நிலுவை ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ் தகவல்

Update: 2021-07-15 05:15 GMT

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்.

சேலம் மாநகராட்சி நான்கு மண்டலங்களிலும் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் போன்றவர்களுக்கும், நான்கு வார்டு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 4,769 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்குரிய ஊதியத்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று  தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக இரண்டு மாத ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில்  4,400 பணியாளர்களுக்கு மே மாத நிலுவைத் தொகையான ரூ.7,68,69,007 தொகையை ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதல் அளித்து சம்மந்தப்பட்ட பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News