கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், உள்ளாட்சி தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்

Update: 2021-08-28 15:13 GMT

வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வன்

சேலத்தில் நடைபெற்ற  வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில்,கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

சேலத்தில் வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்,  கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம், கிராம உதவியாளர் காலி பணியிடங்களை உடனே போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, மாநில பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில், அரசு பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், உள்ளாட்சி தேர்தல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் வருகின்ற 31 -ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து கண்டனம் தெரிவித்து பணியில் ஈடுபடுவோம். அதற்கு  பின்னரும் கோரிக்கைகளுக்கு  பேச்சுவார்த்தை நடத்தி அரசு தீர்வு காணாவிட்டால், இரண்டாவது கட்டமாக செப். 9 -ஆம் தேதி  ஜாக்டோ-ஜியோ, அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்களை ஒன்று திரட்டி, மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார்  அவர்.

Tags:    

Similar News