சேலத்தில் 2000 தாலிக்கயிறு கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

ஸ்ரீ காந்தரி மீனாட்சி மாரியம்மன் கோயிலில், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு 2000 தாலிக்கயிறு கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

Update: 2021-08-20 06:45 GMT

2000 தாலிக்கயிற்றால் அலங்காரம் செய்யப்பட அம்மன். 

ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்னை மகாலட்சுமியை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். அதனை தமிழகம் முழுவதும் இன்று வரலட்சுமி நோன்பு விரதமாக பெண்கள் கடைப்பிடித்து கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ காந்தரி மீனாட்சி மாரியம்மன் திருக்கோயிலில்,வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு 2000 தாலி கயிறுகளால் தாலி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தாலி கயிறு பிரசாதமாக பெற்று சென்றனர்.

மேலும் அருகாமையில் உள்ள ஸ்ரீ வன பத்ரகாளி அம்மனுக்கு 2000 வண்ண வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பெண்கள் அம்மன் சன்னதியில் சுமங்கலி பூஜை நடத்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல அரசு கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ள எல்லைப்பிடாரி அம்மனுக்கு ஆவணி மாதம் பிறப்பையொட்டி  தாலி அலங்காரம் செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News