பாலியல் சர்ச்சையில் சேலம் மாநகராட்சி: முன்களப்பணியாளர் பகீர் புகார்

சேலம் மாநகராட்சியில் முன்களப்பணியாளராக பணியாற்றிய பெண், அலுவலர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

Update: 2021-07-29 08:30 GMT

சேலம் மாநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், முன்களப்பணியாளராக (கணக்கெடுப்பு பணி), 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார்.  இவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று  புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அந்த மனுவில், ஏ.ஐ.டி.யு.சி. சங்க தலைவர் ஷாநவாஸ் என்பவர்,  கடந்த ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் மூர்த்தி மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சேலம் மாநகராட்சி ஆணையாளர், அம்மாபேட்டை உதவி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு என புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளார். 

சேலம் மாநகராட்சியில் சிறந்த பணியாளருக்கான நற்சான்றிதழ் வாங்கிய பெண் ஒருவர், மாநகராட்சி அலுவலர்கள் மீது பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளது, சேலத்தில் பரபரப்பை உள்ளது.

Tags:    

Similar News