சேலம், கரூரில் ரூ.500 கோடியில் நவீன நூற்பாலை, நெசவு ஆலை அமைக்க முடிவு

சேலம் மற்றும் கரூரில் ரூ.500 கோடியில் நவீன நூற்பாலை, நெசவு ஆலை அமைக்க உள்ளதாக தமிழ்நாடு ஃபேபிரிக் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-24 14:24 GMT

தமிழ்நாடு ஃபேபிரிக் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் அழகரசன்

சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில், 105 ஏக்கரில்,  500 கோடி ரூபாய் செலவில்  அதிநவீன நூற்பாலை மற்றும் நெசவு ஆலை அமைக்க உள்ளதாக,  தமிழ்நாடு ஃபேபிரிக் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் அழகரசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, சேலத்தில் செய்தியாளர்களிடம், தமிழ்நாடு ஃபேபிரிக் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் அழகரசன் கூறியதாவது:  தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் மாநாடு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பினை பெருக்கும் நோக்கில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன நூற்பாலை மற்றும் நெசவு ஆலை அமைக்கபட உள்ளது.


சேலத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் 170 கோடி முதலீட்டிலும் கரூர் மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் 330 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த அதிநவீன ஆலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு ஃபேப்பரிக் உற்பத்தியாளர்களுககு வழங்கிவந்த ஏற்றுமதியில் எம்.இ.எஸ் ஏற்றுமதி மதிப்பீட்டில் இரண்டு சதவீதத்தை திருப்பி வழங்கி வந்தனர். இந்தத் திட்டம் கடந்த ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திட்டத்தின் மூலம் மீண்டும் செயல்படுத்தப்படும் என,  மத்திய அரசு அறிவித்த நிலையில் அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News