குழந்தைகளுக்கு தனி வார்டு - மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் சேலம் அரசு மருத்துவமனை

மூன்றாவது அலையை எதிர்கொள்ள சேலம் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில், தனி வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-18 14:51 GMT

நாடு முழுவதும் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. அடுத்து மூன்றாவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தேவையான படுக்கை மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த மருத்துவ கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் தனி வார்டு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகள் நலப் பிரிவில் 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவு அதன் செயற்கை சுவாசம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவப்பொருட்கள் தயார் நிலையில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை பொறுத்து படுக்கை வசதிகள்  அதிகப்படுத்தபடும் எனவும், மருத்துவமனை முதல்வர்ர் வள்ளி சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News