கர்ப்பிணிகள் கொரோனோ வார்டில் பணியாற்றுவதில் இருந்து விலக்கு

சேலம் அரசு மருத்துவமனை கொரோனோ வார்டில் பணியாற்றுவதில் இருந்து கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளதாக, டீன் முருகேசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-05-09 14:55 GMT

சேலம் அரசு மருத்துவமனையில் கொரானா வார்டில் பணியாற்ற  கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் அரசு மருத்துவமனை டீன் முருகேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ஏற்கனவே கொரானா பணியில்  பணியாற்ற கர்ப்பிணி பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்று அது அரசாணையாக வழங்கப்பட்டுள்ளது.
கொரானா வார்டில் பணியாற்றுவதற்காக 300 செவிலியர்கள் மற்றும் 300 மருத்துவர்கள் தயாராக உள்ளனர். சுமார் 80 பெண்கள் உள்பட 100 பேர்  கர்ப்பிணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக விடுப்பில் உள்ளதாக, அவர் மேலும்  தெரிவித்தார்.

Tags:    

Similar News