சேலம் மாவட்ட தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்

சேலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்;

Update: 2021-03-13 06:30 GMT

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன. தொடர்ந்து இதனை கண்காணிக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு, வீடியோ கண்காணிப்பு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

அதன் படி கெங்கவல்லி மற்றும் ஆத்தூருக்கு பிரியதர்ஷினி மிஸ்ரா, ஏற்காடு மற்றும் ஓமலூருக்கு செபாலிஸ்ரீ வஸ்தவா அந்தலீப், மேட்டூர் தொகுதிக்கு ஆகர்சன் சிங் இடைப்பாடி மற்றும் சங்ககிரிக்கு ஸ்ரீதர் கெடிலா, சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு தொகுதிக்கு சுமிதா பரமதா, சேலம் தெற்கு மற்றும் வீரபாண்டி தொகுதிகளுக்கு ஆனந்த்குமார் ஆகியோர் தேர்தல் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் அஸ்தம்பட்டி, இரும்பாலை மற்றும் கே.ஆர்.தோப்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கண்காணிக்கின்றனர்.

Tags:    

Similar News