பசியோடு வாடுபவர்களுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பசியோடு வாடுபவர்களுக்கு செவ்வாய்பேட்டை போலீசார் உணவு வழங்கினர்.;

Update: 2021-05-27 12:45 GMT

பசியோடு வாடும் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் சேலம் செவ்வாய்பேட்டை போலீசார்.

சேலம் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் சாலைகள் வெறிச்சோடியது. பொதுப் போக்குவரத்து முடங்கியது. வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

 சேலம் அரசு மருத்துவமனையில் கொரானா நோயாளிகளை  அனுமதிக்க வரும் உறவினர்கள் உணவகம் இல்லாததால் பசியோடு இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையோர வாசிகள் ஆதரவின்றி உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். 

இதனை கருத்தில் கொண்ட சேலம் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தனர். இதனடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட உணவுப் பொருளுடன் காவல்துறை வாகனத்தில் வந்த அவர்கள் சாலையில் வருவோரும் போவோரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளி உறவினர்களையும் அழைத்து மதிய உணவு வழங்கினர். எதிர்பாராதவிதமாக காவல்துறையினர் அழைத்து மதிய உணவு வழங்கியது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

 செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான காவல் அதிகாரிகள் இந்த சமூக சேவையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News