சேலம்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் 4 பேர் சரண்

சேலத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர்கள் 4 பேர் சரண் அடைந்தனர்.

Update: 2021-07-02 08:30 GMT

சேலத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தவர்கள்.

இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு சிறையில், பாஜக பிரமுகர்  கல்யாணராமன் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி,  சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது, சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அவருக்கு எதிராக அரசு மருத்துவமனை வளாகத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ப இளைஞர்கள் சிராஜூதின், அப்பாஸ் உள்ளிட்ட 4 பேர் சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தனர். பின்னர், அனைவரும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News