சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்ந்தது
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளை புகை சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் பழைய கோப்புகள் மற்றும் காகிதங்கள் எரிக்கப்பட்டன. இதனால் காலை முதல் பல மணி நேரம் வரை மண்டல அலுவலக வளாகத்தை ஒட்டி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாயினர்.
மேலும் மண்டல அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமும் இயங்கி வருவதால் அங்கு வந்து சென்ற பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். இனி வரும் நாட்களில் மாநகராட்சி ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.