சேலம் தலைமை தபால் நிலையம் முன் மறியல்: 500க்கும் மேற்பட்டோர் கைது

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-27 08:30 GMT

சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து, வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் நாடு முழுவதும் பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததோடு போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News