பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி போராட்டம்

சேலம் மாநகராட்சி பகுதி பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்

Update: 2021-08-08 07:30 GMT

பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இதுவரை முடிவடையவில்லை. ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சேலம் திருச்சி பிரதான சாலையில் தாதகாப்பட்டி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அந்த சாலையில் உள்ள பொதுமக்கள் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்வதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

பொது மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News