பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் சேலத்தில் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச பேரவை சார்பில், சேலத்தில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.;

Update: 2021-07-08 11:15 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு, தொமுச பேரவை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகம் முழுவதும் தொமுச பேரவை சார்பில்,  இன்று அந்தந்த மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு,  தொமுச பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர்கள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோல், டீசல்,  கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை பற்றி கவலை கொள்ளாமல் மோடி அரசு தொடர்ந்து விலை ஏற்றத்தை அதிகரித்து வருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும்,  கேஸ் விலையை பாதி அளவு குறைக்க மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News