"கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும்" - தெய்வீக பாடல்களை இடைவிடாமல் இசைத்து சேலம் சிறுமி பிரார்த்தனை..!

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து சேலத்தில் சிறுமி கீர்த்தனைகள் உள்பட 25 தெய்வீக பாடல்களை இடைவிடாமல் வீணையில் இசைத்தார்.

Update: 2021-06-17 12:20 GMT

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து சேலத்தில் சிறுமி தியாகராஜர் கீர்த்தனைகள் உள்பட 25 தெய்வீக பாடல்களை இடைவிடாமல் வீணையில் இசைத்தார்...

சேலம் செங்கல்பட்டியை சேர்ந்த சைந்தவிகருணாகரன். கடந்த 5 ஆண்டுகளாக வீணை இசைப்பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த சிறுமி இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தை வீணாக்காமல் தான் கற்ற இசையால் சாதனை புரிய முயற்சிகளை மேற்கொண்டார். இதன்படி தியாகராஜர் கீர்த்தனைகள் உள்பட 25 தெய்வீகப் பாடல்களை தொடர்ந்து மூன்று மணிநேரம் இடைவிடாமல் வீணையில் இசைத்தார். கொரோனா பிடியிலிருந்து உலக மக்கள் மீள வேண்டும் என்ற பிரார்த்தனையோடு இந்த சாதனை முயற்சியை மேற்கொண்ட சிறுமி சைந்தவி மற்ற குழந்தைகளும் ஊரடங்கு நேரத்தை வீண்டிக்காமல் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



Tags:    

Similar News