நேபாள நாட்டு வாலிபர் சேலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் புலிகுத்தி தெரு பகுதியில் நேபாள நாட்டை சேர்ந்த கஜேந்திரன் என்ற வாலிபருடன் 10க்கும் மேற்பட்டோர் அறை எடுத்து தங்கி ஆங்காங்கே செக்யூரிட்டி வேலை செய்து வருகின்றனர். இந் நிலையில் இன்று காலை கஜேந்திரன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சேலம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து உயிரிழந்த கஜேந்திரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் தங்கியிருந்த சக நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.