குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன்

குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை அலுவலர்கள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று, அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-07-05 12:00 GMT

சேலத்தில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறையின் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் ஆய்வுக்கூட்டம், இன்று  நடைபெற்றது. இதில் சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வரவேற்று பேசினார்.

பின்னர் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மிக முக்கியமான துறையாகும். குழந்தைகள், மகளிர், திருநங்கைகள் மற்றும் முதியவர்கள் நலன்  காக்கும் துறை ஆகும். எனவே குழந்தை திருமணம் நடந்தால் உடனே அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

குழந்தை திருமணம் நடத்துபவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரும்   நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று, அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து,   அமைச்சர் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சமூக நலத்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News