எம்ஜிஆர் துவக்கியதே மூன்றாவது அணி தான்: கமலஹாசன்

Update: 2021-03-16 17:45 GMT

சேலம் தாதகாபட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் வெற்றி நடைபோடும் முதல்வர், ஆட்சிக்கு வரும் வரை 3 கோடியாக இருந்த சொத்து, ஆட்சிக்கு வந்த பிறகு 2 கோடியாக குறைந்து விட்டது. மற்றும் உலகளவில் ஊழல் செய்தவர்கள் திமுக கட்சியினர் என்று விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் பாலம் என்று வரும் திட்டம் லாபம் என்று படிக்கிறார்கள். அதனால் தான் பல இடங்களில் பாலங்களுக்கு பொக்கை விழுந்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒவ்வொரு தொகுதியில் உள்ள பணிகளின் பட்டியலை வாங்கி வந்து தலைமையை அணுகுகள். அதை பகுதியில் உள்ள மக்களிடம் இது குறித்து விளக்கமளித்து எத்தனை நாட்களில் முடிக்க முடியும் என்பது குறித்து தெரியபடுத்துங்கள் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வாரு தொகுதியிலும் செய்ய முடிகின்ற பணிகளின் வாக்குறுதியாக கொடுத்து, அவர்களிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்தியிட்டு கொடுங்கள், சாட்சியாக நானும் கையெழுத்து போடுகிறேன் என்றார்.

மேலும் நேர்மை என்ற ஆயுதம் என் கையில் உள்ளது. ஆனால் மற்ற கட்சியினரிடையே இல்லை என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அரசியல் தொழில் அல்ல, எங்களின் கடமை எனவும் கூறினார்.

மக்களை சந்திக்க தரையில் அங்கபிரதச்சனம் செய்வேன். மக்கள் வாழும் இடம் தான் எனக்கு கோவில், மக்கள் தான் என் மதம் என்றார். தமிழகத்தில் கதை எழுதுபவர்கள் எல்லாம் இரண்டு கட்சியிலும் காலமாகி விட்டனர். தற்போது திறமை உள்ளவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ளனர். தரமான கல்வி, குடிநீர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவைகள் இலவசமாக மக்கள் நீதி மய்யம் கொடுக்கும். தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை என்பவர்களுக்கு வாசிங்மிசன் கொடுக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆளும் கட்சி விஷபாம்பு போன்றது தலை தூண்டிக்கப்பட்ட நிலையில் வால் மட்டும் ஆடிக்கொண்டுள்ளது. மற்றொரு கட்சியில் தலையுள்ளது அது மிகவும் ஆபத்து என்று பேசினார். மூன்றாவது அணி வென்றதில்லை என்கிறார்கள். கணக்கு கேட்டு வந்த எம்ஜிஆரே மூன்றாவது அணிதான். எம்ஜிஆர் துவக்கியதே மூன்றாவது அணி தான், அது தான் வென்று மற்ற கட்சிகளை வனவாசம் போக செய்தது. அந்த இரண்டு இலையில் இரண்டு பேர் விருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் கண்ட கனவை பின்னுக்கு தள்ளிவிட்டீர்கள் என்று உரையாற்றினார். மேலும் எனக்கான தொகுதியை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிற்கே எனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் முன் உதாரணமாக மாற்றுவேன் என்றார்.

Tags:    

Similar News