சேலத்தில் ஹீமோபீலியா சிறப்பு தடுப்பூசி முகாம்
ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகானை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரானாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் ஹீமோபோலியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமினை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த முகாமின் மூலம் ஹீமோபீலியா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த உறைதலைத் தடுக்கும் வகையில் முன்கூட்டியே மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்துக்கு பிறகு தடுப்பூசி போட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அனைவரும் முன்கூட்டியே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இந்த தடுப்பூசி முகாமில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த நோய்களினால் பாதிக்கப் பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி 200க்கும் மேற்பட்டோருக்கு போடப்பட உள்ளதாக மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.