மாரியப்பன் பெயர் வைத்திருந்தால் காரில் இலவச பயணம்: சேலம் கால்டாக்சி சலுகை
மாரியப்பன் என்ற பெயர் வைத்திருந்தால் 3 நாட்களுக்கு இலவச பயணிக்கலாம் என சேலம் மேங்கோ கால்டாக்சி நிறுவனம் அறிவித்துள்ளது.;
பாராலிம்பிக் வீரர் மாரியப்பனை கௌரவப்படுத்தும் விதமாக சேலத்தில் இயங்கி வரும் கால்டாக்சி நிறுவனம் மூன்று நாட்களுக்கு கட்டணமில்லா சலுகையை அறிவித்துள்ளது.
பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறையாக பதக்கம் வென்றுள்ளார். சேலத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன். சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டிக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் பதக்க நாயகன் மாரியப்பனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சேலத்தில் இயங்கி வரும் மேங்கோ கால்டாக்சி நிறுவனம் கட்டண சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்ற பெயர் கொண்டவர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு கால்டாக்சி பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த மூன்று நாட்களும் சேலம் நகரப் பகுதிக்குள் பயணம் மேற்கொள்ள மேங்கோ கால்டாக்சியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.