குப்பைக்கு சென்ற மலர்கள்

சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

Update: 2021-05-06 06:00 GMT

வ.உ.சி பூ மார்க்கெட்டில் பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

சேலம் வ.உ.சி பூ மார்க்கெட்டில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் வ.உ.சி பூங்கா செயல்பட்டுவருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மார்க்கெட்டில் கடை வைத்துள்ள 4 பேருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றைய தினம் மார்க்கெட் வளாகத்தில் கொரோனா சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மார்க்கெட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பை கருதி இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை வஉசி பூ மார்க்கெட்டை மூடி நோய்தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பூ மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த பூக்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டன.

Tags:    

Similar News