மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
சேலத்தில் மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், கிருத்திகா தம்பதியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாமனார் பிச்சைமுத்து என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதற்கு கணவர் உறுதுணையாக இருப்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினால் இரண்டு லட்சம் பணம், இரண்டு பவுன் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்றும் கணவர் குடும்பத்தார் அடித்து கொடுமை செய்வதாக குற்றம்சாட்டினார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கணவர் மற்றும் மாமனார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்தார்.