சேலத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது;
சேலத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆட்டோ ஓட்டுனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து, மணிகண்டனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.