சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா டெஸ்ட்: சேலம் போலீஸ் அதிரடி

சேலத்தில், தேவையின்றி வாகனங்களில் திரிவோரை பிடித்து, மாநகர போலீசார் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.

Update: 2021-06-04 11:00 GMT

தமிழ்நாடு முழுவதும்  கொரோனோ நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதையடுத்து, முழு ஊரடங்கு அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. சேலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. 

எனினும், இதை மதிக்காமல் வாகன ஓட்டிகள் பலர், ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, வெளியே திரிகின்றனர். இவ்வாறு,  தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரியும் நபர்களை பிடித்து மாநகர காவல்துறை வழக்குப் பதிவு செய்துவந்தனர். கடந்த வாரங்களில் 1440 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மாநகர காவல்துறை இன்று திடீரென மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேவை இல்லாமல் சுற்றித் திரியும் நபர்களை பிடித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர். 

குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, குகை, பழைய பேருந்து நிலையம், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இத்தகைய பரிசோதனை செய்து வருகின்றனர். திடீரென காவல் துறை எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பாராத வாகன ஓட்டிகள், கலக்கமடைந்துள்ளார்.

Tags:    

Similar News