ராசா மீது சேலம் போலீஸ் கமிஷனரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார்

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்ககோரி சேலம் போலீஸ் கமிஷனரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார்;

Update: 2021-03-28 13:00 GMT

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் இன்று  சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வந்து காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

பின்னர் வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் கலையரசி செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அவதூறாக பேசி இருக்கிறார்.இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News