3 போஸ்ட் ஆபீஸ் மூடப்பட்டதை கண்டித்து சேலத்தில் ஊழியர்கள் போராட்டம்

சேலத்தில், 3 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து, தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-24 12:53 GMT

சேலத்தில்,  3 அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து,  சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பஜார், அன்னதானபட்டி, அம்மாபேட்டை பஜார் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அஞ்சல் அலுவலகங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, ஊழியர்கள் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று கருப்பு அட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், மூடப்பட்ட அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்களை மாவட்ட எல்லைகளில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்துவதை கைவிட வேண்டும், மூடப்பட்ட அஞ்சல் அலுவலகங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News