இஸ்லாமிய பெண்கள் சேவை அமைப்பின் செயலர் கொலை வழக்கில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சேலம், அம்மாபேட்டை பாலாஜி நகரை சேர்ந்தவர் பாட்ஷா (48). சேலம், முகம்மது புறாவில் உள்ள மஜித்தில், மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி உமைபானு (45). இவர் கடந்த 2008 முதல், சேலம் மாவட்ட இஸ்லாமிய பெண்கள் சேவை அமைப்பின் செயலராகவும், மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்தார். நேற்று முன்தினம், பாட்ஷா வேலைக்கு சென்றார். மாலை 4.30 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த உமைபானுவின், கை, கால்களை கட்டிப்போட்டு, மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கதவுகள் திறந்து கிடந்ததால், சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது, உமைபானு இறந்து கிடந்ததோடு, பீரோவில் உள்ள பொருட்களும் சிதறிக்கிடந்தன.
இது குறித்து, அளிக்கப்பட்ட புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, உதவி கமிஷனர் அனந்தகுமார், இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து, கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார். கொலை குறித்து பல்வேறு கோணங்களில், தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.