தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: இளங்கோவன்

தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது, நாளைய தமிழகம் விஜயகாந்த் தமிழகமாக இருப்பது உறுதி என்று தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் பேட்டி.;

Update: 2021-02-09 12:15 GMT
தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: இளங்கோவன்
  • whatsapp icon

தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியின் 2021ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில்  சீலநாயக்கன்பட்டி பகுதியில்  தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டம் குறித்து விவசாயிகளுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு எட்டப்படவில்லை. மத்தியஅரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் இளங்கோவன்.அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது, விஜயகாந்த் எடுக்கும் முடிவிற்கு ஒன்று சேர்ந்து சிறப்பாக செயல்படுவோம் எனவும் நாளைய தமிழகம்  விஜயகாந்தின் தமிழகம் ஆக இருக்கும் என்பதில் உறுதி என்றார்.

Tags:    

Similar News