உலக இதய தினம்: 32 வகை காய்கறி, பழங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி
உலக இதய தினத்தையொட்டி 32 வகையான காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகளால் அலங்கரித்து மாணவி ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;
மனித இதய வடிவில் 32 வகையான காய்கறி , பழங்கள், கீரை வகைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவி அபிநய பிரியா.
நாளை உலக இதய தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சேலத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மனித இதய வடிவில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வுை ஏற்படுத்தினார்.
ஊரடங்கு காலங்களில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் அதிகப்படியாக ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் ஆகியவை உண்பதால் உடல் உபாதை ஏற்படுவதுடன் இதயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறுவயதிலேயே இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழப்பு சம்பவம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இதயத்தை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சேலம் சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி அபிநய பிரியா, மனித இதய வடிவில் 32 வகையான காய்கறி , பழங்கள், கீரை வகைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உலக சாதனை உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது இயற்கையான காய்கறி, கீரைகள், பழங்களை உண்பதால் இதயம் வளுபடுவதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகையால் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் மேலும் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த இந்த விழிப்புணர்வை செய்ததாகக் கூறினார்.