சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஏலம்
சேலத்தில் பல்வேறு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஏலம் விடப்பட்டன.
சேலம் மாவட்டம் ஏற்காடு, ஆத்தூர், மேட்டூர், கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளசாராயம் மற்றும் மதுபானம் கடத்தல் சம்பவங்களில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு பிரிவினர் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டன.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் கூடுதல் துணைக்கண்காணிப்பாளர் பொற்செழியன் தலைமையில் வாகன ஏலம் நடத்தப்பட்டது. நான்கு சக்கர வாகனங்கள் 6 மற்றும் 97 இரு சக்கர வாகனங்களை முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்று பொதுமக்கள் மற்றும் பட்டறை உரிமையாளர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ப அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.