மனைவி மீது ஆசிட் வீசி கொலை: கணவன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்
சேலத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பழைய பேருந்து நிலையத்தில் மனைவியின் மீது ஆசிட் ஊற்றி கொன்ற கணவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ், இவரது மனைவி ரேவதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சினை குறித்து சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி விசாரணைக்காக வந்த ரேவதி, கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டு அவரது தாயாருடன் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த கணவர் ஏசுதாஸ் ஆசிட்டை எடுத்து வந்து மனைவியின் மீது ஊற்றி கொலை செய்தார்.
இந்த கொலை வழக்கில் வழக்குபதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த ஏசுதாசை காவல்துறையினர் அடுத்த நாளே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இயேசுதாஸ் மக்கள் நடமாட்டம் மிகுந்த பழைய பேருந்து நிலையத்தில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு, அவ்விடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா குண்டர் தடுப்பு சட்டத்தில் காவலில் வைக்க ஆணை பிறப்பித்தார். இந்த ஆணை சேலம் மத்திய சிறையில் சார்வு செய்யப்பட்டது.