சேலம் மாநகராட்சி உயிரி எரிவாயு அலகில் (பயோகேஸ்) மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சேலம் மாநகராட்சி வாய்க்கால் பட்டறை பகுதியில் அமைந்துள்ள உயிரி எரிவாயு அலகினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்

Update: 2021-06-29 01:00 GMT

சேலம் மாநகராட்சி வாய்க்கால் பட்டறை பகுதியில் அமைந்துள்ள உயிரி எரிவாயு அலகினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்

சேலம் மாநகராட்சி வாய்க்கால் பட்டறை பகுதியில் மாநகராட்சி சார்பில் உயிரி எரிவாயு அலகு அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் கழிவு செய்யப்பட்ட பழங்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து சுற்றிலும் உள்ள பகுதிகளில் தெரு விளக்குகள், நீரேற்றும் பணிகளுக்கான மின் மோட்டார்கள், கல்வி நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தினமும் சுமார் 500 கிலோ எடையிலான கழிவு பழங்களை பயன்படுத்தி 400 யூனிட் மின்சாரம் இந்நிலையம் வாயிலாக உற்பத்தி செய்ய இயலும். இந்நிலையத்தில் பழக்கழிவுகள் அரவை இயந்திரம் பழுதடைந்து உள்ளதால் தற்போது இயங்காமல் உள்ளது. 

இந்த நிலையில் உயிரி எரி வாயு அலகினை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பார்வையிட்ட ஆணையாளர் பழுதினை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், அவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு நிலையத்தினை பார்வையிட்டு செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News