சேலத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது

சேலத்தில் நியாயவிலை கடைகள் மூலமாக இரண்டாம் தவணை 2 ஆயிரம் மற்றும், கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி துவங்கியது.

Update: 2021-06-15 05:21 GMT

சேலத்தில்,  நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்ட இரண்டாம் தவணை  கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால், பலரது வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு, ரேஷனில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்,  முதல் தவணையாக 2000 வழங்கபட்டது. இந்த நிலையில் இரண்டாவது தவனையாக ரூபாய் 2000 ரூபாய் மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு, இன்றுமுதல்  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

சேலம் மாவட்டத்தில், 10 லட்சத்து 12 ஆயிரத்து 249 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணை 2 ஆயிரம் நிவாரண தொகை, இன்று முதல் வழங்கும் பணி துவங்கியது. இதனை சேலம் கன்னங்குறிச்சி பகுதியில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாய், 1591 நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

நியாய விலைக்கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து,  நீண்ட வரிசையில் நின்று இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை  பெற்று செல்கின்றனர். ஒருநாளைக்கு ஒரு நியாய விலை கடைகளுக்கு 100 டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண நிதி  தொகுப்பு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News