வருவாய்த்துறையினருக்கு தடுப்பூசி போடும் பணி: சேலம் கலெக்டர் நேரில் ஆய்வு

சேலத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி போடும் முகாமினை, கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

Update: 2021-04-22 12:30 GMT

சேலம் மாவட்டத்தில் கொரோனோ நோய் தொற்றை தடுக்கும் விதமாக,  45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  வைரஸ் நோய் தொற்று தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ராமன்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இம்முகாமில், 120க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கொரோனோ வைரஸ் நோய் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் பேசிய கலெக்டர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  நோய்த்தொற்று தடுப்புக்கான தடுப்பூசியினை இதுவரை போட்டுக் கொள்ளாதவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பு ஊசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தனி வட்டாட்சியர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழரசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News