தேசிய அடையாள அட்டை கேட்டு சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய அடையாள அட்டை கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-25 09:31 GMT

தேசிய அடையாள அட்டை கேட்டு,  சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும்,  21 வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய அடையாள அட்டை மற்றும் மாநில அரசு வழங்கும் நல உதவிகள் முறையாக கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை தாமதமின்றி வழங்கக்கோரி, சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் அனைத்து அரசு நல உதவிகள் சிரமமில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி களைந்து, மருத்துவர்களை அமர்த்தி சான்றிதழ் வழங்க வேண்டும், அரசின் திட்டங்கள் அனைத்தும் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய அடையாள அட்டை தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News