சேலம்: பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி
சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில், நவராத்திரி சிறப்பு கொலு கண்காட்சி மற்றும் விற்பனையை, கலெக்டர் கார்மேகம் துவக்கி வைத்தார்.;
சேலம் அண்ணா பட்டு மாளிகையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில், நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை, சேலம் கலெக்டர் கார்மேகம் துவக்கி வைத்து பாா்வையிட்டாா்.
அக்டேபர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பலவித கொலு பொம்மைகள் ரூ.15 முதல் ரூ. 7,500 வரை விற்பனைக்கு உள்ளன. நவராத்திரி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் அதே வேளையில் நலிவடைந்த கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என, பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் நரேந்திரபோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.