சேலத்தில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்

சேலம் மாநகர பகுதிகளில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-26 06:45 GMT

சேலத்தில் தடையை மீறி காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர் 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வாங்க பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க மாவட்டந்தோறும் நடமாடும் காய்கறி கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 354 வாகனங்கள் மூலமாக காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சேலம் ஆனந்தா பாலம் ஆற்றங்கரையோர பகுதியில் வியாபாரிகள் சிலர் தடையை மீறி கடைகள் அமைத்து காய்கறி விற்பனையில் ஈடுபட்டனர். அந்தக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டதால் காவல்துறையினர் உடனடியாக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். ஒரு சில வியாபாரிகள் காவல்துறையினரை கண்டதும் அவசர அவசரமாக கடைகளை தாங்களே அகற்றினர். 

மேலும் அதிக அளவில் கூட்டம் நிறைந்து காணப்பட்ட கடை வியாபாரிகள் 4 பேருக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தடையை மீறி இனி காய்கறி கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை காவல்துறையினர் எச்சரித்தனர்


Tags:    

Similar News