வெள்ளி கொலுசு கைவினை சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு
சேலத்தில், தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்று, வெள்ளி கொலுசு கைவினை சங்கத்தினர், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு கைவினை சங்க செயலாளர் ஆனந்தராஜன், பொருளாளர் பூபதி ஆகியோர் கலெக்டர் ராமனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், சேலம் மாவட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள், வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பம், குடும்பமாக குடிசை தொழில்போல், அவர்கள் இத்தொழிலை செய்து வருகின்றனர்.
எனவே இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் மேம்பாட்டிற்காக தனி நலவாரியம் அமைக்க வேண்டும். சேலம் கொலுசுக்கு உற்பத்தி பூங்கா அமைக்க வேண்டும், என்று அதில் அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.