ஓணம் பண்டிகை; சேலத்தில் பெண்கள் நடனமாடி உற்சாக காெண்டாட்டம்
சேலத்தில் ஓணம் பண்டிகையையொட்டி, அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி பெண்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கேரளாவில் மிக சிறப்பாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத அஸ்த நட்சத்திரத்தில் இருந்து திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் நடைபெறும். கேரளாவில் கொண்டாடப்படும் திருவோண பண்டிகை மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வீடுகளிலும் மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக பல வண்ண மலர்களால் ஆன கோலங்களை பெண்கள் வரைந்து அந்த கோலத்திற்கு நடுவில் குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டு கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள கேரள சமாஜம் நாயர் சேவா சமூகத்தினர் ஓணம் திருநாளை வரவேற்கும் விதமாக மலர்களாலான அத்தப்பூ கோலமிட்டு தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். அதனை தொடர்ந்து பெண்கள் பாடல்கள் பாடி, நடனமாடி பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
இதேபோல சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கேரள மக்கள் தங்கள் வீடுகளிலேயே ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.