மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு

மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்.;

Update: 2021-07-15 08:00 GMT

மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கும்  குறைகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களின் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது, அந்தந்தத் துறை அதிகாரிகள் திட்டப்பணிகளை காலதாமதமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள்,குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பின்னர் ஆய்வுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் கூறும் கருத்துகளைக் கேட்டறிந்து,  அந்தந்தத் துறை அதிகாரிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும் தற்போது நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்தும் அமைச்சர் விளக்கமாக கேட்டறிந்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,  நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News