சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர் கார்மேகம்
தேசிய கைத்தறி தினத்தையொட்டி அலுவலகத்தில் கைத்தறி சிறப்பு கண்காட்சி, விற்பனையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் இன்று ஏழாவது தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏழாவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்பு கைத்தறி கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பட்டு சேலை, பட்டு அங்கவஸ்திரம், பருத்தி வேஷ்டி, காட்டன் சேலைகள் , காட்டன் வேஷ்டிகள், ஆகியவைகளை பார்வையிட்டார். இன்று ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த சிறப்பு கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கைத்தறி ஆடைகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.