குடிபோதையில் 2 பேருக்கு வெட்டு –வாலிபருக்கு வலை வீச்சு
சேலத்தில் குடிபோதையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
சேலம் கன்னங்குறிச்சி காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவரது தாத்தா காலமானதால் உறவினர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் குடிபோதையில் இருந்த ஆனந்த், தென்னரசு என்பவரின் தாயை தள்ளி விட்டதுடன் அவரின் மனைவியையும் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தென்னரசு குடிபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்டுவதற்கு ஓடிவந்தார். இதில் ஆனந்தின் முதுகுப்பகுதியில் வெட்டு விழுந்தது தடுக்க வந்த சிவானந்தம் என்ற சிறுவனின் கட்டை விரல் துண்டானது.
இதையடுத்து காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தென்னரசு தேடி வருகின்றனர்.