சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள்

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளால் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது.

Update: 2021-09-21 11:15 GMT

ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள்.

சேலம் சந்திப்பிலிருந்து விருதாச்சலம் மற்றும் பெங்களூரில் இருந்து காரைக்கால் இடையே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு வழிப் பாதையை இருவழிப் பாதையாக போக்குவரத்து காவலர்கள் மாற்றி அமைத்துள்ளனர். இதனால் ரயில்கள் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் மின்சார வழியில் செல்வதற்கான மின்கம்பம் அமைக்கும் பணிக்காகவும், ரயில்கள் வருகைக்காகவும்  ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 3 பேர்  சிக்கிக் கொண்டனர். அங்கு இருந்த சக இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டை திறக்க ரயில்வே ஊழியரிடம் கூறியும் அவர் மறுத்து விட்டார்.

இதனால் அந்த வழியாக வந்த ரயில் அவர்களை மோதி செல்வதுபோல் சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர். ரயில்வே ஊழியர்களின் இந்த செயல் பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News